டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,43,659 ஆக உயர்ந்து 1,52,130 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 15,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,05,43,659 ஆகி உள்ளது.  நேற்று 176 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,52,130 ஆகி உள்ளது.  நேற்று 16,801 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,78,883 ஆகி உள்ளது.  தற்போது 2,08,261 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,145 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,84,768 ஆகி உள்ளது  நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,336 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,500 பேர் குணமடைந்து மொத்தம் 18,81,088 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 708 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,30,668 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,158 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 643 பேர் குணமடைந்து மொத்தம் 9,09,701 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,790 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 94 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,85,710 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,139 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 232 பேர் குணமடைந்து மொத்தம் 8,76,372 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,624 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,36,884 ஆகி உள்ளது.  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,416 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,603 பேர் குணமடைந்து மொத்தம் 7,65,757 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 67,498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,29,573 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,251 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 806 பேர் குணமடைந்து மொத்தம் 8,11,023 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.