இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.63 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,63,239 ஆக உயர்ந்து 40,739 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 56,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 19,63,239 ஆகி உள்ளது.  நேற்று 919 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 40,739 ஆகி உள்ளது.  நேற்று 48,540 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 13,27,200 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,850 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 10,309 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,68,265 ஆகி உள்ளது  நேற்று 334 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,476 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,165 பேர் குணமடைந்து மொத்தம் 3,05,521  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,175 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆகி உள்ளது  இதில் நேற்று 112 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,461 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,051 பேர் குணமடைந்து மொத்தம் 2,14,815 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,218 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,84,461 ஆகி உள்ளது  இதில் நேற்று 77 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,681 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,729 பேர் குணமடைந்து மொத்தம் 1,04,354 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,619 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,51,449 ஆகி உள்ளது  இதில் நேற்று 100 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,804 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,407 பேர் குணமடைந்து மொத்தம் 74,679 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,076 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,40,232 ஆகி உள்ளது  இதில் நேற்று 11  பேர் உயிர் இழந்து மொத்தம் 4,044 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 890 பேர் குணமடைந்து மொத்தம் 1,26,116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 1963239 affected, 40739 died, கொரோனா, இந்தியா, 1963239 பேர் பாதிப்பு, 40739 பேர் மரணம்

கார்ட்டூன் கேலரி