இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.67 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,67,264 ஆக உயர்ந்து 12262  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 13,103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,67,264 ஆகி உள்ளது.  நேற்று 341 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 12,262 ஆகி உள்ளது.  நேற்று 6,889 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,94,438 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,519 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,307 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,16,752 ஆகி உள்ளது  நேற்று 114 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,651 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,315 பேர் குணமடைந்து மொத்தம் 59,166 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,174 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 50,193 ஆகி உள்ளது  இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 576 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 842 பேர் குணமடைந்து மொத்தம் 27,624 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2,414 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,102 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 1904 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 957 பேர் குணமடைந்து மொத்தம் 17,457 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 520 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,148 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,561 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 348 பேர் குணமடைந்து மொத்தம் 17,438 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 583 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,181 ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 465 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 335 பேர் குணமடைந்து மொத்தம் 9,239 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.