இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.95 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,95,812 ஆக உயர்ந்து 12,970  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 14,721  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,95,812 ஆகி உள்ளது.  நேற்று 366 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 12,970 ஆகி உள்ளது.  நேற்று 9,026 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,14,206 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,68,586 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,827 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,24,331 ஆகி உள்ளது  நேற்று 142 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,893 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,955 பேர் குணமடைந்து மொத்தம் 62,773 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,115 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 54,449 ஆகி உள்ளது  இதில் நேற்று 41 பேர் உயிர் இழந்து மொத்தம் 666 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1630 பேர் குணமடைந்து மொத்தம் 30,271 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 3,137 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 53,116 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 2035 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2228 பேர் குணமடைந்து மொத்தம் 23,569 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,198 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,619 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 340 பேர் குணமடைந்து மொத்தம் 18,167 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 809 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,594 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 507 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 357 பேர் குணமடைந்து மொத்தம் 9,995 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.