இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.72 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,72,985 ஆக உயர்ந்து 14,907  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 16,870  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,72,985 ஆகி உள்ளது.  நேற்று 424 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 14,907 ஆகி உள்ளது.  நேற்று 13,089 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,688 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,86,335 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,889 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,42,889 ஆகி உள்ளது  நேற்று 208 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,739 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,161 பேர் குணமடைந்து மொத்தம் 73,792  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 3,788 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 70,390 ஆகி உள்ளது  இதில் நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,365 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,124 பேர் குணமடைந்து மொத்தம் 41,437 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,865 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 67,468 ஆகி உள்ளது  இதில் நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 866 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,424 பேர் குணமடைந்து மொத்தம் 37,763 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 572 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,001 ஆகி உள்ளது  இதில் நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,736 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 575 பேர் குணமடைந்து மொத்தம் 21,096 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 664 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,557 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 596 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 470 பேர் குணமடைந்து மொத்தம் 12,586 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.