டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 25,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 7,94,842 ஆகி உள்ளது.  நேற்று 479 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 21,623 ஆகி உள்ளது.  நேற்று 19,407 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,960 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,77,158 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 6,875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,30,599 ஆகி உள்ளது  நேற்று 219 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,667 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,067 பேர் குணமடைந்து மொத்தம் 1,27,259  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,231 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,765 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,994 பேர் குணமடைந்து மொத்தம் 78,169  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 2,187 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,07,051 ஆகி உள்ளது  இதில் நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,258 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,027 பேர் குணமடைந்து மொத்தம் 82,226 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 861 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 39,280 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,009 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 429 பேர் குணமடைந்து மொத்தம் 27,742 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 1,201 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,362 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 862 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 796 பேர் குணமடைந்து மொத்தம் 21,127 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.