டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,536 ஆக உயர்ந்து 4024 பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 7113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,38,536 ஆகி உள்ளது.  நேற்று 156 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 4024 ஆகி உள்ளது.  நேற்று 3283 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 57,692 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76,811 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 3041 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 50,231 ஆகி உள்ளது  நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 1635 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1196 பேர் குணமடைந்து மொத்தம் 14,600 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 765 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,277 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 112 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 833 பேர் குணமடைந்து மொத்தம் 8324  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 394 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,063 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 858 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 243 பேர் குணமடைந்து மொத்தம் 6412  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 58 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,418 ஆகி உள்ளது.  நேற்று 30 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 261 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 273 பேர் குணமடைந்து மொத்தம் 6540 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 286 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,028 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 163 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 62 பேர் குணமடைந்து மொத்தம் 3848 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.