இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.39 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,39,684 ஆக உயர்ந்து 29,890  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 45,601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 12,39,684 ஆகி உள்ளது.  நேற்று 1130 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 29,890 ஆகி உள்ளது.  நேற்று 31,824 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,84,266 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,25,114 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 10,576 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,37,61 ஆகி உள்ளது  நேற்று 280 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,556 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,552 பேர் குணமடைந்து மொத்தம் 1,87,769  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,849 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,86,492ஆகி உள்ளது  இதில் நேற்று 518 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,144 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,913 பேர் குணமடைந்து மொத்தம் 1,31,583 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,227 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,26,323 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,719 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,532 பேர் குணமடைந்து மொத்தம் 1,07,650 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,764 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 75,833 ஆகி உள்ளது  இதில் நேற்று 55 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,519 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,780 பேர் குணமடைந்து மொத்தம் 27,239 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,045 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,713 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 823  பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,553 பேர் குணமடைந்து மொத்தம் 32,127 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.