இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.37 லட்சத்தை தாண்டியது

--

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,37,022 ஆக உயர்ந்து 31,406  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 48,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 13,37,022 ஆகி உள்ளது.  நேற்று 761 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 31,406 ஆகி உள்ளது.  நேற்று 32,534 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,50,107 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,55,089 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 9,615 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,57,117 ஆகி உள்ளது  நேற்று 278 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,714 பேர் குணமடைந்து மொத்தம் 1,99,967  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 6,785 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆகி உள்ளது  இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,320 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,504 பேர் குணமடைந்து மொத்தம் 1,43,297 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,025 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,28,389 ஆகி உள்ளது  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,777 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,866 பேர் குணமடைந்து மொத்தம் 1,10,931 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,007 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 85,870 ஆகி உள்ளது  இதில் நேற்று 110 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,726 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,037 பேர் குணமடைந்து மொத்தம் 31,347 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,147 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 80,858 ஆகி உள்ளது  இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 933 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,380 பேர் குணமடைந்து மொத்தம் 39,935 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.