இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14.36 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,36,019 ஆக உயர்ந்து 32,096  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 48,932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 14,36,019 ஆகி உள்ளது.  நேற்று 704 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 32,812 ஆகி உள்ளது.  நேற்று 31,502 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,18,735 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,84,051 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 9,431 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,75,799ஆகி உள்ளது  நேற்று 267 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,656 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,044 பேர் குணமடைந்து மொத்தம் 2,13,238  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 6,986 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆகி உள்ளது  இதில் நேற்று 85 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,494 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,471 பேர் குணமடைந்து மொத்தம் 1,56,526 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,075 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,30,606 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,827 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,807 பேர் குணமடைந்து மொத்தம் 1,14,875 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,627 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 96,298 ஆகி உள்ளது  இதில் நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 1041 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,046 பேர் குணமடைந்து மொத்தம் 46,301 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,199 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 96,141 ஆகி உள்ளது  இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,880 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,088 பேர் குணமடைந்து மொத்தம் 35,838 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.