இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16.97 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,97,054 ஆக உயர்ந்து 36,551  பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 57,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 16,97,054 ஆகி உள்ளது.  நேற்று 764 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 36,551 ஆகி உள்ளது.  நேற்று 36,554 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,64,430 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 10,320 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,22,118 ஆகி உள்ளது  நேற்று 265 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,994 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,543 பேர் குணமடைந்து மொத்தம் 2,56,158  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,881 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆகி உள்ளது  இதில் நேற்று 94 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,935 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,778 பேர் குணமடைந்து மொத்தம் 1,83,956 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,376 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,40,933 ஆகி உள்ளது  இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,840 பேர் குணமடைந்து மொத்தம் 63,864 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,195 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,34,598 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,963 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,206 பேர் குணமடைந்து மொத்தம் 1,20,930 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,483 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,24,115 ஆகி உள்ளது  இதில் நேற்று 84 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,314 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,094 பேர் குணமடைந்து மொத்தம் 49,788 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.