இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17.51 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,51,919 ஆக உயர்ந்து 37,403 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 54,865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 17,51,919 ஆகி உள்ளது.  நேற்று 852 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 37,403 ஆகி உள்ளது.  நேற்று 51,232 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,46,879 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,67,205 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 9,601 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,31,719 ஆகி உள்ளது  நேற்று 322 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,316 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,725 பேர் குணமடைந்து மொத்தம் 2,66,883  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,879 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆகி உள்ளது  இதில் நேற்று 99 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,034 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,010 பேர் குணமடைந்து மொத்தம் 1,90,966 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 9,276 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,209 ஆகி உள்ளது  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,407 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,760 பேர் குணமடைந்து மொத்தம் 76,614 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,118 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,36,716 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,989 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,201 பேர் குணமடைந்து மொத்தம் 1,22,131 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,172 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,29,287 ஆகி உள்ளது  இதில் நேற்று 98 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,412 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,860 பேர் குணமடைந்து மொத்தம் 53,648 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி