டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,04,702 ஆக உயர்ந்து 38,161 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 52,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 18,04,702 ஆகி உள்ளது.  நேற்று 756 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 38,161 ஆகி உள்ளது.  நேற்று 48,213 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,87,228 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,879 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 9,509 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,41,228 ஆகி உள்ளது  நேற்று 260 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,576 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,926 பேர் குணமடைந்து மொத்தம் 2,76,809  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,57,613 ஆகி உள்ளது  இதில் நேற்று 98 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,517 பேர் குணமடைந்து மொத்தம் 1,96,483 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,555 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,58,764 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,474 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,272 பேர் குணமடைந்து மொத்தம் 82,886 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 961 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,37,677 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,004 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,186 பேர் குணமடைந்து மொத்தம் 1,23,317 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,532 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,34,819 ஆகி உள்ளது  இதில் நேற்று 84 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,496 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,077 பேர் குணமடைந்து மொத்தம் 57,725 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.