டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,331 ஆக உயர்ந்து 38,971 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 50,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 18,55,331 ஆகி உள்ளது.  நேற்று 806 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 38,971 ஆகி உள்ளது.  நேற்று 43,079 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 12,30,440 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,85,483 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 8,968 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,50,196 ஆகி உள்ளது  நேற்று 266 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,842 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,221 பேர் குணமடைந்து மொத்தம் 2,87,030  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,608 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,53,222 ஆகி உள்ளது  இதில் நேற்று 109 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,241 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,800 பேர் குணமடைந்து மொத்தம் 2,02,283 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,872 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,66,586 ஆகி உள்ளது  இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,537 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,786 பேர் குணமடைந்து மொத்தம் 86,672 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,752 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,39,571 ஆகி உள்ளது  இதில் நேற்று 98 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,594 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,775 பேர் குணமடைந்து மொத்தம் 62,500 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,38,482 ஆகி உள்ளது  இதில் நேற்று 17  பேர் உயிர் இழந்து மொத்தம் 4,021 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 937 பேர் குணமடைந்து மொத்தம் 1,24,254 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.