இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.25 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,25,409 ஆக உயர்ந்து 41,638 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 62,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 20,25,409 ஆகி உள்ளது.  நேற்று 899 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 41,638 ஆகி உள்ளது.  நேற்று 50,141 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 13,77,384 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,05,933 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 11,514 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,79,799 ஆகி உள்ளது  நேற்று 316 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,476 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,854 பேர் குணமடைந்து மொத்தம் 3,16,375  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,684 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆகி உள்ளது  இதில் நேற்று 110 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,272 பேர் குணமடைந்து மொத்தம் 2,21,087 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,328 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,96,789 ஆகி உள்ளது  இதில் நேற்று 72 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,753 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,516 பேர் குணமடைந்து மொத்தம் 1,12,870 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,805 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,58,254 ஆகி உள்ளது  இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,897 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,602 பேர் குணமடைந்து மொத்தம் 80,281 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,299 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,41,531 ஆகி உள்ளது  இதில் நேற்று 15  பேர் உயிர் இழந்து மொத்தம் 4,059 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1008 பேர் குணமடைந்து மொத்தம் 1,27,124 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி