டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,09,603 ஆக உயர்ந்து 8891  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 11,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,09,603 ஆகி உள்ளது.  நேற்று 389 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 8890 ஆகி உள்ளது.  நேற்று 7,259 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,231 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,46,460 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,493 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,01,141 ஆகி உள்ளது  நேற்று 127 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,717 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,718 பேர் குணமடைந்து மொத்தம் 47,796 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,982 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,698 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,342 பேர் குணமடைந்து மொத்தம் 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2137 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 36,824 ஆகி உள்ளது  இதில் நேற்று 129 பேர் உயிர் இழந்து மொத்தம் 1216 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 667 பேர் குணமடைந்து மொத்தம் 13,398 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 495 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,562 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 1416 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 392 பேர் குணமடைந்து மொத்தம் 15,501 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 528 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,616 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 365 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 317 பேர் குணமடைந்து மொத்தம் 7,609 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.