டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,33,008 ஆக உயர்ந்து 9520  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 11,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,33,008 ஆகி உள்ளது.  நேற்று 321 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 9,520 ஆகி உள்ளது.  நேற்று 7,362 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,689 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,760 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,390 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,047,958 ஆகி உள்ளது  நேற்று 120பேர் உயிர் இழந்து மொத்தம் 3,950 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,632 பேர் குணமடைந்து மொத்தம் 50,978 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,974 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,661 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 435 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,138 பேர் குணமடைந்து மொத்தம் 24,547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2,224 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 41,182 ஆகி உள்ளது  இதில் நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 1327 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 878 பேர் குணமடைந்து மொத்தம் 15,823 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 511 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,590 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 1478 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 442 பேர் குணமடைந்து மொத்தம் 16,333 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 497 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,615 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 399 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 398 பேர் குணமடைந்து மொத்தம் 8,268 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.