டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,029 ஆக உயர்ந்து 9915  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 10,021 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,43,029 ஆகி உள்ளது.  நேற்று 395 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 9,915 ஆகி உள்ளது.  நேற்று 10637 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,320 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,750 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 2,786 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,10,744 ஆகி உள்ளது  நேற்று 178 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,128 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,071 பேர் குணமடைந்து மொத்தம் 56,049 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,843 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,504 ஆகி உள்ளது  இதில் நேற்று 44 பேர் உயிர் இழந்து மொத்தம் 479 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 797 பேர் குணமடைந்து மொத்தம் 25,344 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,647 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,829 ஆகி உள்ளது  இதில் நேற்று 73 பேர் உயிர் இழந்து மொத்தம் 1400 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 604 பேர் குணமடைந்து மொத்தம் 16,427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 514 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,104 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 1506 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 339 பேர் குணமடைந்து மொத்தம் 16,672 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 476 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,091 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 417 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 342 பேர் குணமடைந்து மொத்தம் 8,610 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.