இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.11 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,11,732 ஆக உயர்ந்து 13,277  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 15,915  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,11,727 ஆகி உள்ளது.  நேற்று 307 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 13,277 ஆகி உள்ளது.  நேற்று 13,975 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,28,181 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,70,732 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,874 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,28,205 ஆகி உள்ளது  நேற்று 91 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,984 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,380 பேர் குணமடைந்து மொத்தம் 64,153 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,396 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 56,845 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 704 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,045 பேர் குணமடைந்து மொத்தம் 31,316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 3,630 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 56,746 ஆகி உள்ளது  இதில் நேற்று 77 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,112 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,725 பேர் குணமடைந்து மொத்தம் 31,294 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 539 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,737 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,639 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 535 பேர் குணமடைந்து மொத்தம் 18,702 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 541 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,135 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 529 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 374 பேர் குணமடைந்து மொத்தம் 10,369 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.