இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.26 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,26,910 ஆக உயர்ந்து 13,703  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 15,183  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,26,910 ஆகி உள்ளது.  நேற்று 426 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 13,703 ஆகி உள்ளது.  நேற்று 9,069 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,37,252 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,904 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,870 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,32,075 ஆகி உள்ளது  நேற்று 186 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,170 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,591 பேர் குணமடைந்து மொத்தம் 65,744 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 3,000 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,746 ஆகி உள்ளது  இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,175 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,719 பேர் குணமடைந்து மொத்தம் 33,013 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,582 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,746 ஆகி உள்ளது  இதில் நேற்று 53 பேர் உயிர் இழந்து மொத்தம் 757 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,438 பேர் குணமடைந்து மொத்தம் 32,764 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 580 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,317 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,664 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 655 பேர் குணமடைந்து மொத்தம் 19,357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 596 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,731 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 550 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 626 பேர் குணமடைந்து மொத்தம் 10,597 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.