இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.91 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,91,170 ஆக உயர்ந்து 15,308  பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 18,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,91,170 ஆகி உள்ளது.  நேற்று 401 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 15,308 ஆகி உள்ளது.  நேற்று 13,983 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,671 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,90,136 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 4,842 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,741 ஆகி உள்ளது  நேற்று 192 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,931 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,661 பேர் குணமடைந்து மொத்தம் 77,453  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 3,390 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 73,780 ஆகி உள்ளது  இதில் நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,429 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,328 பேர் குணமடைந்து மொத்தம் 44,765 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,509 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 70,977 ஆகி உள்ளது  இதில் நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 911 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,236 பேர் குணமடைந்து மொத்தம் 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 577 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,578 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,754 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 410 பேர் குணமடைந்து மொத்தம் 22,506 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 636 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,193 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 611 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 533 பேர் குணமடைந்து மொத்தம் 13,119 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.