டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,09,446 ஆக உயர்ந்து 15,689  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 18,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 5,09,446 ஆகி உள்ளது.  நேற்று 381 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 15,689 ஆகி உள்ளது.  நேற்று 10,246 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,917 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,97,784 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 5,024 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,52,765 ஆகி உள்ளது  நேற்று 175 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,106 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,362 பேர் குணமடைந்து மொத்தம் 79,815  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 3,460 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 77,240 ஆகி உள்ளது  இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,492 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,326 பேர் குணமடைந்து மொத்தம் 47,091 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,646 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 74,622 ஆகி உள்ளது  இதில் நேற்று 46 பேர் உயிர் இழந்து மொத்தம் 957 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,358 பேர் குணமடைந்து மொத்தம் 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 580 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,158 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,772 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 532 பேர் குணமடைந்து மொத்தம் 22,038 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 750 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,943 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 630 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 464 பேர் குணமடைந்து மொத்தம் 13,583 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.