டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,51,543 ஆக உயர்ந்து 1,08,371 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 74,450 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 70.51,543 ஆகி உள்ளது.  நேற்று 921 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,08,371 ஆகி உள்ளது.  நேற்று 89,022 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,74,863 ஆகி உள்ளது.  தற்போது 8,67,243 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 11,416 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,17,434 ஆகி உள்ளது  நேற்று 308 பேர் உயிர் இழந்து மொத்தம் 40,040 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 26,430 பேர் குணமடைந்து மொத்தம் 12,55,779  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 5,653 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,50,517 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,194 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,659 பேர் குணமடைந்து மொத்தம் 6,97,699 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,517 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,00,786 ஆகி உள்ளது  இதில் நேற்று 102 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,891 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,337 பேர் குணமடைந்து மொத்தம் 5,69,947 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,242 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,51,370 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,187 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,222 பேர் குணமடைந்து மொத்தம் 5,97,033 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,046 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,33,712 ஆகி உள்ளது  இதில் நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,353 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,063 பேர் குணமடைந்து மொத்தம் 3,87,149 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.