இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.50 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 27,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 8,50,358 ஆகி உள்ளது.  நேற்று 543 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 22,687 ஆகி உள்ளது.  நேற்று 19,983 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,36,231 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,91,058 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 8,139 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,46,600 ஆகி உள்ளது  நேற்று 223 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,116 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,360 பேர் குணமடைந்து மொத்தம் 1,36,985  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,965 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆகி உள்ளது  இதில் நேற்று 69 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,898 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,591 பேர் குணமடைந்து மொத்தம் 85,915  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,781 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,10,921 ஆகி உள்ளது  இதில் நேற்று 34 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,334 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,998 பேர் குணமடைந்து மொத்தம் 87,692 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 872 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 41,027 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,033 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 502 பேர் குணமடைந்து மொத்தம் 28,685 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,798 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 36,216 ஆகி உள்ளது  இதில் நேற்று 70 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 615 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 880 பேர் குணமடைந்து மொத்தம் 14,718 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 850358 affected, 22687 died, கொரோனா, இந்தியா, 850358 பேர் பாதிப்பு, 22687 பேர் மரணம்

கார்ட்டூன் கேலரி