இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.70 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,70,169 ஆக உயர்ந்து 24,929  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 32,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 9,70,169 ஆகி உள்ளது.  நேற்று 614 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 24,929 ஆகி உள்ளது.  நேற்று 20,545 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,13,735 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,31,116 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 7,975 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,75,640 ஆகி உள்ளது  நேற்று 233 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,928 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,606 பேர் குணமடைந்து மொத்தம் 1,52,613  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 4,496 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆகி உள்ளது  இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,000 பேர் குணமடைந்து மொத்தம் 1,02,310 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,647 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,16,993 ஆகி உள்ளது  இதில் நேற்று 41 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,487 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,483 பேர் குணமடைந்து மொத்தம் 95,699 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,176 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,283 ஆகி உள்ளது  இதில் நேற்று 87 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 933 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1076 பேர் குணமடைந்து மொத்தம் 18,457 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 925 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,648 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,080 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 791 பேர் குணமடைந்து மொத்தம் 31,346 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.