இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25.89 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,89,208 ஆக உயர்ந்து 50,084 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 63,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 25.89,208 ஆகி உள்ளது.  நேற்று 951 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 50,084 ஆகி உள்ளது.  நேற்று 53,116 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,60,672 ஆகி உள்ளது.  தற்போது 6,77,960 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 12,020 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,84,754 ஆகி உள்ளது  நேற்று 322 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,749 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,844 பேர் குணமடைந்து மொத்தம் 4,08,286  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,860 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,32,105 ஆகி உள்ளது  இதில் நேற்று 127 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,641 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,236 பேர் குணமடைந்து மொத்தம் 2,72,251 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,732 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,81,817 ஆகி உள்ளது  இதில் நேற்று 87 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,5625 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,414 பேர் குணமடைந்து மொத்தம் 1,91,414 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,818 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,19,926 ஆகி உள்ளது  இதில் நேற்று 114 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 3,832 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,629 பேர் குணமடைந்து மொத்தம் 1,34,251 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,276 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,51,928 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,188 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,143 பேர் குணமடைந்து மொத்தம் 1,36,251 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.