டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,15,893 ஆக உயர்ந்து 83,230 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 97,856 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 51.15,893 ஆகி உள்ளது.  நேற்று 1,140 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 83,230 ஆகி உள்ளது.  நேற்று 82,922 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 40,22,049 ஆகி உள்ளது.  தற்போது 10,09,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 23,3365 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,21,221 ஆகி உள்ளது  நேற்று 474 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,409 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,559 பேர் குணமடைந்து மொத்தம் 7,92,832  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,835 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,99,760 ஆகி உள்ளது  இதில் நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,105 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,845 பேர் குணமடைந்து மொத்தம் 4,97,376 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆகி உள்ளது  இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,559 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,768 பேர் குணமடைந்து மொத்தம் 4,64,668 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,725 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,84,990 ஆகி உள்ளது  இதில் நேற்று 55 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,536 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,580 பேர் குணமடைந்து மொத்தம் 3,75,809 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 6,229 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,30,265 ஆகி உள்ளது  இதில் நேற்று 86 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,690 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,580 பேர் குணமடைந்து மொத்தம் 2,58,573 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.