டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,12,686 ஆக உயர்ந்து 84,404 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 52.12,686 ஆகி உள்ளது.  நேற்று 1,175 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 84,404 ஆகி உள்ளது.  நேற்று 87,778 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 41,09,828 ஆகி உள்ளது.  தற்போது 10,17,717 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 24,619 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,45,840 ஆகி உள்ளது  நேற்று 468 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,351 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,522 பேர் குணமடைந்து மொத்தம் 8,12,354  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,702 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,01,462 ஆகி உள்ளது  இதில் நேற்று 72 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,177 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,712 பேர் குணமடைந்து மொத்தம் 5,08,088 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,560 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,25,420 ஆகி உள்ளது  இதில் நேற்று 59 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,618 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,524 பேர் குணமடைந்து மொத்தம் 4,70,192 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,366 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,94,356 ஆகி உள்ளது  இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,629 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,768 பேர் குணமடைந்து மொத்தம் 3,83,077 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 6,029 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,36,294 ஆகி உள்ளது  இதில் நேற்று 81 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,771 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,718 பேர் குணமடைந்து மொத்தம் 2,63,288 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.