இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53.05 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,05,475 ஆக உயர்ந்து 85,625 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 92,788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 53.05,475 ஆகி உள்ளது.  நேற்று 1,221 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 85,625 ஆகி உள்ளது.  நேற்று 95,373 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,05,201 ஆகி உள்ளது.  தற்போது 10,13,907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 21,656 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,67,496 ஆகி உள்ளது  நேற்று 440 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,791 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 22,078 பேர் குணமடைந்து மொத்தம் 8,34,432  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,096 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,09,568 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,244 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,803 பேர் குணமடைந்து மொத்தம் 5,19,891 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,488 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,685 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,524 பேர் குணமடைந்து மொத்தம் 4,75,717 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,626 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,02,982 ஆகி உள்ளது  இதில் நேற்று 179 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,808 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,949 பேர் குணமடைந்து மொத்தம் 3,94,026 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 6,494 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,42,788 ஆகி உள்ளது  இதில் நேற்று 98 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,869 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,806 பேர் குணமடைந்து மொத்தம் 2,70,094 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 

You may have missed