டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்து 86,774 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 92,574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 53.98,230 ஆகி உள்ளது.  நேற்று 1,149 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 86,774 ஆகி உள்ளது.  நேற்று 94,384 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,99,724 ஆகி உள்ளது.  தற்போது 10,10,975 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 20,519 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,88,015 ஆகி உள்ளது  நேற்று 425 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,216 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,501 பேர் குணமடைந்து மொத்தம் 8,57,933  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,218 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,17,776 ஆகி உள்ளது  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,302 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,820 பேர் குணமடைந்து மொத்தம் 5,30,711 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,569 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,36,477 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,751 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,556 பேர் குணமடைந்து மொத்தம் 4,81,273 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,364 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,11,346 ஆகி உள்ளது  இதில் நேற்று 114 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,922 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,818 பேர் குணமடைந்து மொத்தம் 4,04,841 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 5,729 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,48,517 ஆகி உள்ளது  இதில் நேற்று 84 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,953 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,596 பேர் குணமடைந்து மொத்தம் 2,76,690 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.