இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55.60 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,60,105 ஆக உயர்ந்து 88,965 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 74,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 55.60,105 ஆகி உள்ளது.  நேற்று 1,056 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 88,965 ஆகி உள்ளது.  நேற்று 1,02,070 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 44,94,720 ஆகி உள்ளது.  தற்போது 9,75,623 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 15,738 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,24,380 ஆகி உள்ளது  நேற்று 344 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,015 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 32,007 பேர் குணமடைந்து மொத்தம் 9,16,348  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,235 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,31,749 ஆகி உள்ளது  இதில் நேற்று 51 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,410 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,502 பேர் குணமடைந்து மொத்தம் 5,51,821 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,344 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,47,337 ஆகி உள்ளது  இதில் நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,871 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,492 பேர் குணமடைந்து மொத்தம் 4,91,971 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,339 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,26,876 ஆகி உள்ளது  இதில் நேற்று 122 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,146 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,925 பேர் குணமடைந்து மொத்தம் 4,23,377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 4,618 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,58,893 ஆகி உள்ளது  இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,135 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,320 பேர் குணமடைந்து மொத்தம் 2,89,594 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.