டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 88,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 59.90,581 ஆகி உள்ளது.  நேற்று 1,324 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 94,534 ஆகி உள்ளது.  நேற்று 92,359 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 49,38,688 ஆகி உள்ளது.  தற்போது 9,56,511 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 20,419 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,21,176 ஆகி உள்ளது  நேற்று 430 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,191 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,644 பேர் குணமடைந்து மொத்தம் 10,16,450  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,293 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,68,761 ஆகி உள்ளது  இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,663 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,125 பேர் குணமடைந்து மொத்தம் 5,97,294 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,647 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,75,017 ஆகி உள்ளது  இதில் நேற்று 85 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,253 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,612 பேர் குணமடைந்து மொத்தம் 5,19,448 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,811 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,66,023 ஆகி உள்ளது  இதில் நேற்று 86 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,503 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,417 பேர் குணமடைந்து மொத்தம் 4,56,719 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 4,302 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,82,835 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,517 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,546 பேர் குணமடைந்து மொத்தம் 3,20,332 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.