இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60.73 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,73,348 ஆக உயர்ந்து 95,574 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 82,767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 60.73,348 ஆகி உள்ளது.  நேற்று 1,040 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 95,574 ஆகி உள்ளது.  நேற்று 74,679 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,13,367 ஆகி உள்ளது.  தற்போது 9,63,551 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 18,056 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,39,232 ஆகி உள்ளது  நேற்று 380 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,565 பேர் குணமடைந்து மொத்தம் 10,30,015  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,925 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,75,674 ஆகி உள்ளது  இதில் நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,708 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,796 பேர் குணமடைந்து மொத்தம் 6,05,090 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,791 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,80,808 ஆகி உள்ளது  இதில் நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,713 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,709 பேர் குணமடைந்து மொத்தம் 5,25,154 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,543 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,75,566 ஆகி உள்ளது  இதில் நேற்று 79 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,582 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,522 பேர் குணமடைந்து மொத்தம் 4,62,241 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 4,250 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,87,085 ஆகி உள்ளது  இதில் நேற்று 71 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,594 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,686 பேர் குணமடைந்து மொத்தம் 3,26,886 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.