டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,43,019 ஆக உயர்ந்து 96,351 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 69,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 61.43,019 ஆகி உள்ளது.  நேற்று 775 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 96,351 ஆகி உள்ளது.  நேற்று 85,394 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,98,573 ஆகி உள்ளது.  தற்போது 9,47,235 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 11,921 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,51,153 ஆகி உள்ளது  நேற்று 180 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,751 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,952 பேர் குணமடைந்து மொத்தம் 10,49,947  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 5,487 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,81,161 ஆகி உள்ளது  இதில் நேற்று 37 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,745 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,210 பேர் குணமடைந்து மொத்தம் 6,12,300 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,589 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,86,397 ஆகி உள்ளது  இதில் நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,383 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,554 பேர் குணமடைந்து மொத்தம் 5,30,708 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,892 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,82,458 ஆகி உள்ளது  இதில் நேற்று 59 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,641 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,509 பேர் குணமடைந்து மொத்தம் 4,69,750 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,790 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,90,875 ஆகி உள்ளது  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,652 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,382 பேர் குணமடைந்து மொத்தம் 3,31,270 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.