இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 63,10,267 ஆக உயர்ந்து 98,708 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 80,748 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 63.10,267 ஆகி உள்ளது.  நேற்று 1,179 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 98,708 ஆகி உள்ளது.  நேற்று 85,274 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 52,70,007 ஆகி உள்ளது.  தற்போது 9,40,644 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 18,317 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,84,446 ஆகி உள்ளது  நேற்று 481 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,662 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,163 பேர் குணமடைந்து மொத்தம் 10,88,322  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,193 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,93,464 ஆகி உள்ளது  இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,828 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,076 பேர் குணமடைந்து மொத்தம் 6,29,211 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,856 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,01,767 ஆகி உள்ளது  இதில் நேற்று 87 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,864 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,890 பேர் குணமடைந்து மொத்தம் 4,85,768 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,659 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,97,602 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,520 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,610 பேர் குணமடைந்து மொத்தம் 5,41,819 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 4,226 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,99,082 ஆகி உள்ளது  இதில் நேற்று 69 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,784 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,434 பேர் குணமடைந்து மொத்தம் 3,42,446 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.