இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 63.91 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 63,91,960 ஆக உயர்ந்து 98,708 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 81,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 63.91,960 ஆகி உள்ளது.  நேற்று 1,096 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 99,804 ஆகி உள்ளது.  நேற்று 78,646 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 53,48,653 ஆகி உள்ளது.  தற்போது 9,42,585 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 16,476 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,00,922 ஆகி உள்ளது  நேற்று 394 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,056 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,104 பேர் குணமடைந்து மொத்தம் 11,04,426  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,751 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,00,235 ஆகி உள்ளது  இதில் நேற்று 41 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,869 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,297 பேர் குணமடைந்து மொத்தம் 6,36,508 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,070 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,11,837 ஆகி உள்ளது  இதில் நேற்று 130 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,994 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,144 பேர் குணமடைந்து மொத்தம் 4,92,412 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,688 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,03,290 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,586 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,516 பேர் குணமடைந்து மொத்தம் 5,47,335 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 4,019 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,03,101 ஆகி உள்ளது  இதில் நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,864 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,864 பேர் குணமடைந்து மொத்தம் 3,46,859 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.