இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65.47 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,47,413 ஆக உயர்ந்து 1,01,812 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 75,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 65.47,413 ஆகி உள்ளது.  நேற்று 937 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,01,812 ஆகி உள்ளது.  நேற்று 81,655 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 55,06,732 ஆகி உள்ளது.  தற்போது 9,37,942 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 14,348 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,30,681 ஆகி உள்ளது  நேற்று 278 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,758 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,835 பேர் குணமடைந்து மொத்தம் 11,34,555  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,224 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,13,014 ஆகி உள்ளது  இதில் நேற்று 41 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,941 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,798 பேர் குணமடைந்து மொத்தம் 6,51,791 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,986 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,30,516 ஆகி உள்ளது  இதில் நேற்று 100 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,219 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,989 பேர் குணமடைந்து மொத்தம் 5,08,495 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,622 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,14,507 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,718 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,596 பேர் குணமடைந்து மொத்தம் 5,58,534 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,631 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,10,626 ஆகி உள்ளது  இதில் நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,977 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,860 பேர் குணமடைந்து மொத்தம் 3,56,826 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.