இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68.32 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,32,988 ஆக உயர்ந்து 1,05,554 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 78,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 68.32,988 ஆகி உள்ளது.  நேற்று 963 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,05,554 ஆகி உள்ளது.  நேற்று 83,209 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 57,24,462 ஆகி உள்ளது.  தற்போது 9,01,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 14,578 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,80,489 ஆகி உள்ளது  நேற்று 366 பேர் உயிர் இழந்து மொத்தம் 39,072 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,715 பேர் குணமடைந்து மொத்தம் 11,96,441  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 5,120 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,34,427 ஆகி உள்ளது  இதில் நேற்று 34 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,086 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,349 பேர் குணமடைந்து மொத்தம் 6,78,828 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,947 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,68,652 ஆகி உள்ளது  இதில் நேற்று 113 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,574 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,832 பேர் குணமடைந்து மொத்தம் 5,42,906 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,447 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,35,855 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,984 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,524 பேர் குணமடைந்து மொத்தம் 5,80,736 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,389 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,24,437 ஆகி உள்ளது  இதில் நேற்று 47 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,200 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,219 பேர் குணமடைந்து மொத்தம் 3,74,922 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.