டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72,37,082 ஆக உயர்ந்து 1,10,617 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 63,520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 72.37,082 ஆகி உள்ளது.  நேற்று 723 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,10,617 ஆகி உள்ளது.  நேற்று 73,910 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 62,98,705 ஆகி உள்ளது.  தற்போது 8,26,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 8,522 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,43,037 ஆகி உள்ளது  நேற்று 187 பேர் உயிர் இழந்து மொத்தம் 40,701 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,356 பேர் குணமடைந்து மொத்தம் 12,97,252  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 4,622 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,63,573 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,291 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,715 பேர் குணமடைந்து மொத்தம் 7,14,427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,191 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,26,106 ஆகி உள்ளது  இதில் நேற்று 87 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,036 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,421 பேர் குணமடைந்து மொத்தம் 6,02,505 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,666 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6, 65,930 ஆகி உள்ளது  இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,371 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,191 பேர் குணமடைந்து மொத்தம் 6,12,320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,957 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,42,118 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,466 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,667 பேர் குணமடைந்து மொத்தம் 3,97,570 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.