இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73.05 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,05,070 ஆக உயர்ந்து 1,10,617 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 67,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 73.05,070 ஆகி உள்ளது.  நேற்று 690 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,11,311 ஆகி உள்ளது.  நேற்று 81,582 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 63,80,456 ஆகி உள்ளது.  தற்போது 8,12,172 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 10,522 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,54,389 ஆகி உள்ளது  நேற்று 158 பேர் உயிர் இழந்து மொத்தம் 40,859 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,517 பேர் குணமடைந்து மொத்தம் 13,16,769  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,892 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,67,465 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,319 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,050 பேர் குணமடைந்து மொத்தம் 7,19,477 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,265 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,35,371 ஆகி உள்ளது  இதில் நேற்று 78 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,198 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,662 பேர் குணமடைந்து மொத்தம் 6,11,167 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 4,462 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6, 70,392 ஆகி உள்ளது  இதில் நேற்று 72 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,198 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,083 பேர் குணமடைந்து மொத்தம் 6,11,167 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,593 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,44,711 ஆகி உள்ளது  இதில் நேற்று 41 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,507 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,736 பேர் குணமடைந்து மொத்தம் 4,01,306 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.