டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,48,238 ஆக உயர்ந்து 1,14,642 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 55,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 75.48,238 ஆகி உள்ளது.  நேற்று 577 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,14,642 ஆகி உள்ளது.  நேற்று 65,496 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 66,59,895 ஆகி உள்ளது.  தற்போது 7,72,475 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 10,269 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,86,321 ஆகி உள்ளது  நேற்று 463 பேர் உயிர் இழந்து மொத்தம் 41,965 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,238 பேர் குணமடைந்து மொத்தம் 13,58,606  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,676 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,79,146 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,406 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,529 பேர் குணமடைந்து மொத்தம் 7,35,638 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,184 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,58,574 ஆகி உள்ளது  இதில் நேற்று 71 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,427 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,893 பேர் குணமடைந்து மொத்தம் 6,37,481 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,295 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,83,486 ஆகி உள்ளது  இதில் நேற்று 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,532 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,005 பேர் குணமடைந்து மொத்தம் 6,32,708 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,725 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,52,660 ஆகி உள்ளது  இதில் நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,629 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,528 பேர் குணமடைந்து மொத்தம் 4,11,611 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.