டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 50,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 78.63,892 ஆகி உள்ளது.  நேற்று 875 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,18,567 ஆகி உள்ளது.  நேற்று 62,154 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 70,75,723 ஆகி உள்ளது.  தற்போது 6,68,273 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 6,417 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,38,961 ஆகி உள்ளது  நேற்று 137 பேர் உயிர் இழந்து மொத்தம் 43,152 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,004 பேர் குணமடைந்து மொத்தம் 14,55,107  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,342 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,04,026 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,572 பேர் குணமடைந்து மொத்தம் 7,65,991 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,471 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,98,378 ஆகி உள்ளது  இதில் நேற்று 52 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,873 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,153 பேர் குணமடைந்து மொத்தம் 7,00,737 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,886 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,06,136 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,873 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,024 பேர் குணமடைந்து மொத்தம் 6,63,456 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,178 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,68,238 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,854 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,741 பேர் குணமடைந்து மொத்தம் 4,33,703 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.