இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 48,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 80,88,046 ஆகி உள்ளது.  நேற்று 562 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,21,131 ஆகி உள்ளது.  நேற்று 57,859 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 73,71,898 ஆகி உள்ளது.  தற்போது 5,93,617 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,902 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,66,668 ஆகி உள்ளது  நேற்று 156 பேர் உயிர் இழந்து மொத்தம் 43,710 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,883 பேர் குணமடைந்து மொத்தம் 14,94,809  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,905 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,17,679 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,243 பேர் குணமடைந்து மொத்தம் 7,84,752 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,025 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,16,809 ஆகி உள்ளது  இதில் நேற்று 45 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,091 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,661 பேர் குணமடைந்து மொத்தம் 7,41,219 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,19,403 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,053 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,087 பேர் குணமடைந்து மொத்தம் 6,83,464 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,861 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,77,895 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,983 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,465 பேர் குணமடைந்து மொத்தம் 4,46,054 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.