டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,63,412 ஆக உயர்ந்து 1,23,650 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 50,466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 83,63,412 ஆகி உள்ளது.  நேற்று 704 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,24,354 ஆகி உள்ளது.  நேற்று 55,873 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 77,10,630 ஆகி உள்ளது.  தற்போது 5,26,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,505 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,98,198 ஆகி உள்ளது  நேற்று 300 பேர் உயிர் இழந்து மொத்தம் 44,548 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,728 பேர் குணமடைந்து மொத்தம் 15,40,005  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,12,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,377 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,35,773 ஆகி உள்ளது  இதில் நேற்று 34 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,281 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,045 பேர் குணமடைந்து மொத்தம் 7,88,780 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35,693 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,477 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,33,208 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,744 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,701 பேர் குணமடைந்து மொத்தம் 8,05,026 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,438 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,487 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,34,429 ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,244 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,504 பேர் குணமடைந்து மொத்தம் 7,04,031 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 19,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,167 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,89,502 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,104 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,014 பேர் குணமடைந்து மொத்தம் 4,59,722 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.