இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84.11 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,11,034 ஆக உயர்ந்து 1,25,029 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 47,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 84,11,034 ஆகி உள்ளது.  நேற்று 672 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,25,029 ஆகி உள்ளது.  நேற்று 54,133 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 77,64,763 ஆகி உள்ளது.  தற்போது 5,19,507 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,246 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,03,44 ஆகி உள்ளது  நேற்று 256 பேர் உயிர் இழந்து மொத்தம் 44,804 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,277 பேர் குணமடைந்து மொத்தம் 15,51,282  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,06,519 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,156 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,38,929 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,312 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,723 பேர் குணமடைந்து மொத்தம் 7,94,503 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,745 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,35,953 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,757 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,292 பேர் குணமடைந்து மொத்தம் 8,07,318 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,745 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,36,777 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,272 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,415 பேர் குணமடைந்து மொத்தம் 7,06,444 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 21,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,852 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,91,354 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,131 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,351 பேர் குணமடைந்து மொத்தம் 4,61,073 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.