டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,53,864 ஆக உயர்ந்து 1,26,653 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 46,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 85,53,864 ஆகி உள்ளது.  நேற்று 490 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,26,653 ஆகி உள்ளது.  நேற்று 48,569 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 79,15,660 ஆகி உள்ளது.  தற்போது 5,09,712 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,585 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,19,858 ஆகி உள்ளது  நேற்று 125 பேர் உயிர் இழந்து மொத்தம் 45,240 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,232 பேர் குணமடைந்து மொத்தம் 15,77,322  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 96,372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,740 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,46,887 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,391 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,360 பேர் குணமடைந்து மொத்தம் 8,01,799 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,334 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,42,967 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,791 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,256 பேர் குணமடைந்து மொத்தம் 8,14,773 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,334 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,43,822 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,344 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,386 பேர் குணமடைந்து மொத்தம் 7,13,684 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,142 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,97,563 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,206 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,858 பேர் குணமடைந்து மொத்தம் 4,67,108 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,249 பேர் சிகிச்சையில் உள்ளனர்.