இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 36,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 95,71,780 ஆகி உள்ளது.  நேற்று 541 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,39,227 ஆகி உள்ளது.  நேற்று 42,971 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 90,15,684 ஆகி உள்ளது.  தற்போது 4,14,574 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,182 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,37,358 ஆகி உள்ளது  நேற்று 115 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,472 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,066 பேர் குணமடைந்து மொத்தம் 17,03,274  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 88,535 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,446 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,113 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,821 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 894 பேர் குணமடைந்து மொத்தம் 8,52,584 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,689 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 664 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,70,076 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,014 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 835 பேர் குணமடைந்து மொத்தம் 8,56,320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,742 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,86,163 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,747 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,413 பேர் குணமடைந்து மொத்தம் 7,63,428 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,988 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,376 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,20,050 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,330 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,590 பேர் குணமடைந்து மொத்தம் 5,56,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.