டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,75,478 ஆக உயர்ந்து 1,50,151 பேர் மரணம் அடைந்து 1,00,16,163 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 20,460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,03,95,938 ஆகி உள்ளது.  நேற்று 221 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,50,372 ஆகி உள்ளது.  நேற்று 19,662 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,16,163 ஆகி உள்ளது.  தற்போது 2,25,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,382 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,54,553 ஆகி உள்ளது  நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,825 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,570 பேர் குணமடைந்து மொத்தம் 18,52,759 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 50,808 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 784 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,24,137 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,124 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,238 பேர் குணமடைந்து மொத்தம் 9,02,817 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 289 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,83,876 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,125 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 428 பேர் குணமடைந்து மொத்தம் 8,73,955 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 811 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,23,181 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,188 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 943 பேர் குணமடைந்து மொத்தம் 8,03,328 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,665  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,394 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,90,883 ஆகி உள்ளது.  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,210 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,110 பேர் குணமடைந்து மொத்தம் 7,12,311 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,059 பேர் சிகிச்சையில் உள்ளனர்.