டில்லி

இந்தியாவில் நேற்று வரை கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 21,02,61,480 ஆகி உள்ளது.

உலகெங்கும் கொரோனா நோயாளிகளுக்குச் சரியான சிகிச்சை கண்டு பிடிக்கவில்லை.   தற்போது கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரக்கால பயன்பாட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதால் பரிசோதனைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

அவ்வகையில் நேற்று வரை இந்தியாவில் 21,02,61,480 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.  நேற்று மட்டும் 7,86,618 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் நேற்று 52,250 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 1,70,19,551 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.