கனடா: இந்திய உணவகத்தில் எரிவாயு கசிந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்

--
(பைல் படம்)

கனடா:

னடாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கனடாவின் ஆன்டோரியோ என்ற பகுதியில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இன்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஓட்டல் சேதமடைந்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எரி வாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.